College Anthem

கலையகம் ஸஹிரா நம் தாயே

கவினுறு புகழொடு திகழ்வாயே

(கலையகம்)

 

திருமறை வழிமுறை கற்றிடுவோம்

திருநபி வழி பின் பற்றிடுவோம்

கருணையூம் பொறுமையூம் பெருகிடவே

கடலென வரும்துயர் வென்றிடுவோம்

(கலையகம்) 

 

அறிவியல் அரசியல் கற்றிடுவோம்

அழகியல் பல கலை கற்றிடுவோம்

அகிலத்தை வென்றிட வழியமைப்போம்

அல்லாஹ் அருள்தனை வேண்டிடுவோம்

(கலையகம்)

 

மலைபல வளமிகு மாவனல்லை

மருவிய கலையகம் ஸஹிராவே

மலைதனில் சுடரெனத் திகழ்ந்திடவே

மறைதரும் இறைவனை வேண்டிடுவோம்

(கலையகம்)

This website uses cookies and asks your personal data to enhance your browsing experience. We are committed to protecting your privacy and ensuring your data is handled in compliance with the General Data Protection Regulation (GDPR).