- September 6, 2022
- Posted by: admin
- Category: News

நீண்ட வரலாற்றைக் கொண்டதும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுள் தனிச்சிறப்பு பெற்ற பாடசாலை என்ற புகழுக்குரியதுமான எமது கல்லூரி 100 ஆண்டுகளை எட்டியூள்ள இத்தருணத்தில் நூற்றாண்டின் புதிய அதிபராக ஜனாப் ஆதம்பாவா முஹம்மது நௌஸாத் (ளுடுநுயூளு-iiஇ டீ.ஐஊவூஇ Pபுனுநுஇ ஆ.நுன) அவர்கள் 2021 ஜூன் மாதம் 10ஆம் திகதி கல்லூரியின் கடமைகளை பொறுப்பேற்றார்.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள அஸ் சிராஜ் மகா வித்தியாலத்தில் ஒரு சாதனையாளராக உருப்பெற்ற இவர் கல்வி இ கலை இ விளையாட்டு போன்ற சகல துறைகளிலும் திறன் படைத்தவராய் 2006 ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3யூ சித்திகளை பெற்று தீவளாவிய திறமை அடிப்படையில் கொழும்பு பல்கலைக்கழகம் நுழைந்து கணினித் துறையில் பட்டம் பெற்றவராவார். அக்கல்லூரியின் வரலாற்று பக்கங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துக்கொண்ட இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையில் தனது 23 ஆம் வயதிலேயே சித்தியடைந்து 25வது வயதில் கல்வி நிருவாக சேவை (ளுடுநுயூளு) அதிகாரியாக நியமனம் பெற்றதுடன் இலங்கையில் மிகக்குறைந்த வயதில் கல்வி நிருவாக சேவை அதிகாரியாக நியமிக்கப் பட்டவர் ஆவார். இவர் தனது பட்டப் படிப்பின் கல்வி டிப்ளோமாவை (Pபுனுநு) இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் கல்வி முதுமானிப் பட்டத்தினை தேசிய கல்வி நிறுவனத்திலும் பூர்த்தி செய்தார். கல்விப் புலமையையூம் சிறந்த ஆளுமையூம் படைத்த இ நவீன போக்குடன் கூடிய தூர நோக்குடன் செயல்படும் இவரது சேவை காலம் எமது கல்லூரியின் அடுத்த பத்து தசாப்தங்களையூம் வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பதிக்கக்கூடிய கீர்த்தி மிக்க காலமாக அமைய வேண்டும் என மாணவர் ஊடகப்பிரிவூ பெருமனதுடன் வாழ்த்துகின்றது.